கால்நடை வளர்ப்போர்
தீவன புல் வளர்த்து பயனடையலாம்.
கறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும்.
கால்நடை வளர்போர் தீவன புல் வளர்த்து பயனடையலாம் என்றுகறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும் என்று கால்நடைத் துறையினர்தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கால்நடைத் துறை வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வேளாண்மை யோடு மீன்வளர்ப்பு, கோழி வளர்ப்பு மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில்ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக கால்நடைகள்
மேய்ச்சலுக்கு சென்று வரும் நடைமுறை தற்போது பின்பற்றப்
படுவதில்லை, மாறாக கால்நடைகளை கட்டி வைத்து மேய்க்கும் காலம் ஆரம்பித்த பின்விவசாயிகள் பசுந்தீவனம் தீவனப்புல் முதலில் நட ஆரம்பித்தனர்.
தீவனப்புல் என்பது நேப்பியர் புல் மற்றும் கம்பு இனக்
கலப்பு செய்து உருவாக்கப்பட்டது. இதில் கோ-1, 2,3,4,5,என்ற
பல ரகங்கள் உண்டு. ஆடு, மாடுகள் இந்த தீவனப்புல்லை விரும்பி உண்ணும். தண்டுகளை கூட மிச்சம் வைக்காமல் தின்று விடும். நிலத்தில் இருந்து அப்படியே அறுத்து போடலாம். தீவனப்புல் நடவு செய்யும் போது இரண்டு அடி வரிசைக்கு வரிசை இடைவெளி இருக்குமாறு நடவேண்டும்.
கரும்பு நடவு செய்வது போல் வரிசையாக நடவு செய்ய வேண்டும். தீவனப்புல் கரனை முளைத்த உடனே
ஒரு களை எடுத்து மண் அனைக்க வேண்டும். மண் தன்மைக்கு ஏற்ப நீர் பாசனம் செய்ய வேண்டும். இயற்கை உரமான அமிர்த கரைசல் கொடுக்கலாம். தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு அறுவடை செய்யலாம்.
கறவை மாடுகளுக்கு நாள் ஒன்று பதினைந்து கிலோ பசுந்தீவனம் தேவை. ஒரு மாட்டிற்கு குறைந்தது 20 இருபது சென்ட் அளவில் பசுந்தீவனம் நடவு செய்ய வேண்டும். பசுந்தீவனங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் கறவை மாடுகள் ஊட்டமுடன் வளர வழி வகுக்கும்.
இந்த தீவனப்புல் தொடர்ந்து கால்நடைகளுக்கு அளிப்பதன் மூலம் அதிக பால் கறக்கும் பசுக்கள் அவற்றின் சினை பிடிக்கும் சுழற்சி ஊக்கு விக்கப்படும். இந்த கரனைப் புல் அதிகம் கொடுப்பது மூலம் பால் கறக்கும் மாடுகளுக்கு அடர் தீவன தேவை குறையும். எனவே ஆடு,மாடு உள்ளிட்ட கால் நடை வளர்ப்போர் தீவன
புல் வளர்த்து கால்நடைகளுக்கு கொடுத்து பயன்
பெறலாம். இவ்வாறு கால் நடை துறையினர்
தெரிவித்துள்ளனர்.