மேச்சேரிகொட்டாயில் .
மூன்று குழந்தைகளுடன் தத்தளிக்கும் பார்வை இழந்த தந்தை உதவிய ஆயுதப்படை காவலர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மேச்சேரி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவரது மனைவி மங்கையர்கரசி (38). இவர்களுக்கு மெய்யரசி (16), பூவிதா (11), ரூபேஷ் (3) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அண்ணாமலை சென்னை உள்ளிட்ட பல்வேறு ஓட்டல்களில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திடீரென பார்வையை இழந்துள்ளார். கண் மருத்தவர்களை பரிசோதித்ததில் மூளையிலிருந்து கண்ணுக்கு செல்லக்கூடிய நரம்பு பகுதியில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பார்வை இழந்துள்ளதாகவும், மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பிள்ளை எனவும் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் ஒரே பாதுகாவலனுக்கு பாதிப்பு ஏற்பட்டதால் அதிர்ந்தது அந்த குடும்பம். இதில் மனம் உடைந்த அண்ணாமலையின் மனைவி மங்கர்கரசி, பார்வை கிடைக்க அவருக்கிருந்த 1 ஏக்கர் நிலத்தையும் விற்று, பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றும் பயனில்லாமல் மனம் வேதனையில் கடந்த 2022ம் ஆண்டு நோய்வாய்பட்டு உயிரிழந்தார் மங்கையரகரசி. தாயில்லாமலும், பார்வையிழந்த தந்தையை வைத்துக்கொண்டு மூன்று பிள்ளைகளும் குடும்பத்தை நடத்த முடியாமல் வாடி வந்த நிலையில், இதனை அறிந்த ஓசூர் பகுதி சேர்ந்த இவர் கிருஷ்ணகிரி ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருபவர் கோவிந்தராசு நேரில் வந்து அவர்களுக்கு தேவையான அரசி உள்ளிட்ட மளிகை பொருட்கள், மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி அண்ணாமலைக்கு சட்டை வேட்டி மற்றும் குழந்தைகளுக்கு சீருடைகளும் பெட்சீட், இரண்டு மாணவிகளுக்கும் தேவையான நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினர்

இதேபோல் ஏழை எளியோரை தேடி அவர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி செய்து வருகின்றனர் ஆயுதப்படை காவலர் கோவிந்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆயுதப்படை காவலர் கோவிந்தராசு இந்த பகுதி மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர் இவர் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்திய பொதுமக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *