தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் தாய்மையை நிர்வாணப்படுத்தி தலைகுனிய வைத்த மணிப்பூர் மாநில பாஜக அரசு மற்றும் இதை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட துணை செயலாளர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட சேர்மன் சூரியகுமார், மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் கவிதாதண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.
இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, ஒன்றிய சேர்மன்கள் திருமதி திருமுருகன், சத்தியா, விஜயா, நகர்மன்ற தலைவர்கள் சங்கிதா வெங்கடேசன், காவியா விக்டர் மற்றும் திமுகவின் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…