தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரதமர் மோடி பதவி விலக கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு திருப்பத்தூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் இதை கண்டு கொள்ளாமல் உள்ள பிரதமர் மோடி பதவி விலக வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட துணை செயலாளர் கலா, நகர செயலாளர் ஆனந்தன், திருப்பத்தூர் நகர்மன்ற உறுப்பினர் வெற்றி கொண்டான் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்…