பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா நிதி வண்டிகளை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா அவர்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
அரியலூர் மற்றும் திருமானூர் பகுதிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்கள் 1888 பேருக்கு 8.5 லட்சம் மதிப்புள்ள விலையில்லா மிதிவண்டியை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு சின்னப்பா வழங்கினார். இதில் அரியலூர், அஸ்தினாபுரம், பெரிய திருக்கோணம், பொய்யாத நல்லூர், கோவிந்தபுரம் , சுண்டக்குடி, குருவாடி, கீழப்பழுவூர் , காமராசவல்லி, ஏலாக்குறிச்சி உள்ளிட்ட 20 பல்வேறு பகுதி பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், திமுக, மதிமுக ஒன்றிய செயலாளர்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.