தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்
திருப்பத்தூர் நீதிமன்றம் முன்பு திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள திருப்பத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ஞானமோகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை மீண்டும் வைக்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர்.