லிஸ்யு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கோயம்புத்தூரைச் சேர்ந்த உயிர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முன்முயற்சியில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி “குட்டி காவலர்கள் & சாலை பாதுகாப்பு” என்று பெயரில் நடத்தப்பட்டது. கோவை TNSTC பயிற்சி மையத்தின் திரு. எல்.கனகசுப்ரமணி அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கமளித்தார்.
பாதுகாப்பான ஓட்டுநர் நடைமுறைகளால் சாலையில் விபத்துகளைத் தடுக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். பள்ளி முதல்வர் அருட்தந்தை முனைவர் வழக்கறிஞர் ஜாய் அரக்கல் அவர்கள் தனது உரையில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை விட மூன்று மடங்கு அதிகமாக சாலை விபத்தில் உயிரிழக்கிறார்கள்.
இதை மாற்றுவதற்கான சிறந்த வழி பள்ளிகளில் பொருத்தமான ஓட்டுநர் பாதுகாப்புக் கல்வியை வழங்குவதாகும். சாலையில் பாதுகாப்பு என்பது நாம் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு என்றும் அவர் கூறினார். பள்ளி சேர்ந்திசை குழுவினர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பாடலை வழங்கினர்.
பல்வேறு போக்குவரத்து அடையாளங்களை மாணவர்கள் பதாகைகளாகக் காட்சிப்படுத்தினர்.
மேலும், போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதாகவும், வீட்டில் குட்டி போலீஸ்காரர்களாக (குட்டி போலீசார்) செயல்படுவதாகவும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். முதலில் பாதுகாப்பு, பிறகு வேகம் என்ற செய்தியுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.