ஒரு பள்ளி அதன் வரவிருக்கும் தலைவர்களுக்கு சில பதவி மற்றும் பொறுப்புகளை ஒப்படைக்கும் ஒரு முக்கியமான சந்தர்ப்பம் பதவியேற்பு விழா. பொறுப்பை ஒப்படைத்தல் மற்றும் அதிகாரம் வழங்குதல் ஆகியவை முக்கியமானவை, ஏனெனில் இது அவர்களை வாழ்நாள் முழுவதும் ஆற்றல்மிக்கவர்களாகவும் அதேநேரத்தில் அக்கறையுடனும் இருக்கக் கற்றுக்கொடுக்கிறது.

நாளைய தலைவர்களை உருவாக்குவதற்கான பதவியேற்பு விழாவை ஜூலை 20, 2023 அன்று பள்ளியின் தாளாளர் அருட்தந்தை முனைவர் ஜோஸ் பால் அவர்கள் தலைமையில் பள்ளியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் வழக்கறிஞர் ஜாய் அரக்கல் சிறப்பாக நடத்தினார்.

பொது வாக்கெடுப்பிற்கு பிறகு ஒரு நிர்வாக அமைப்பின் செயல்பாட்டை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாக இந்நிகழ்வு நடந்தது.

நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட இலாகா உறுப்பினர்களும் அவர்களது பெற்றோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வானது அற்புதமான பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் ஆரம்பமாகியதுஒலிம்பியன் ஜின்சி பிலிப், துணை கமாண்டன்ட், சி.ஆர்.பி.எஃப், அன்றைய தலைமை விருந்தினராக கலந்துகொண்டு தனது வெற்றிபயணத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.

இலாகா பொறுப்பேற்றுக்கொண்ட மாணவர்களுக்கு வெற்றிகரமான பதவிக் காலம் அமைய வாழ்த்தினார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் பதவியைத் தாங்கிய சாஷ், நினைவுப் பரிசு மற்றும் பூங்கொத்து ஆகியவற்றைப் பெற்றனர்.

பள்ளி நிர்வாகி அருட்தந்தை ஆண்டனி வாழப்பில்லி, ஆசிரியர் செயலாளர் திருமதி. சுஜாதா மற்றும் இணை செயலாளர் திருமதி. சுகன்யா ஜெரோம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புதிய பொறுப்பாளர்களின் பெற்றோர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுடனும், இனிவரும் நாட்களுக்கான புதிய நம்பிக்கைகளுடனும் அந்த நாள் நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *