திருவள்ளூர்
தமிழகத்தில் திமுக அரசின் தேர் தல் வாக்குறுதியான மகளிர்க்கு உரிமை தொகை ஆயிரம் வழங் கும் திட்டத்தினை வரும் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ள நிலை யில் அந்த உரிமைத் தொகை பெறுவதற்கான பெயர் சேர்க்கும் முகாம் அந்தந்த ஊராட்சிகளில் நேற்று தொடங்கியது.
அதன்படி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா சோழவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருநிலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார் மனுக்களை பெரும் திட்டத்தினை ஊராட்சி முன்பு நடைபெற்ற விழா வில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார் நிகழ்ச்சிக்கு துணைத் தலைவர்.தனசேகரன் முன்னிலை வகித்தார் இதில் திருநிலை கிராம நிர்வாக அலுவலர் ஜெயப்பிரதா மனுக் களை பயனாளிகளிடமிரு ந்து பெற்று சரி பார்த்தார்.
இதில் ஐ டி கே தன்னார்வ அலு வலர் பி.கீதாலட்சுமி, உதவி தன் னார்வ அலுவலர் எஸ்.சாருமதி மற் றும் ஊராட்சி மன்ற உறுப்பினர் கள் ஆஷா பிரதாபன், ரேவதி ஜான்சன், பிரகதி விண்ணரசு, பூபதி, கவிதா வெங்கடேசன், ஊராட்சி செயலாளர் கிருபாகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் திருநிலை ஊராட்சி சேர்ந்த பெண்கள் ஆர்வத்துடன் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை ஊராட்சி மன்ற தலைவர் அம்மு சிவக்குமார் முன்னிலையில் கிராம நிர்வாக அதிகாரி ஜெயப்பிரிதாவிடம் வழங்கினர்.