ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே சந்திப்பு முகப்பு வாயிலில் முன்பு நடைபெற்றது

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் ஹாஜா நஜிபுதீன் தலைமை வகித்தார் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் சாகுல் ஹமீது மாவட்ட செயலாளர் சீமான் மாவட்ட பொருளாளர் நியாஸ் தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் ஆசப்கான் உள்ளிட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் தமுமுக மாநில செயலாளர் தைக்கால் முபாரக் மனிதநேய மக்கள் கட்சி மாநில பிரிதிநிதி வெங்கலம் ஜபருல்லா தமுமுக மற்றும் மமக மாவட்டத் தலைவர் முஜிபுர் ரஹ்மான் பாத்திமா மாதா கோயில் பங்கு சந்தை ஜெரால்டு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் குத்புதீன் மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அணி மாநில செயலாளர் வழக்கறிஞர் தீன் முகமது மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நவாஸ் மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆரூர் பா சீனிவாசன் விசிக செய்தி தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசாத் திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் வரதராஜன் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஒன்றிய தலைவர் பாவா பகருதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூரில் கிறிஸ்துவ பழங்குடி குக்கி சமூகத்தை சேர்ந்த இளம் பெண் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அயோக்கியர்களையும் வாய் திறக்காமல் மௌனம் காக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *