நாமக்கல்

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்டார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. ஸ்டாலின் இன்று (24.07.2023) தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளின் விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, அவ்விண்ணப்பங்களைப் பயோ-மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, விண்ணப்பம் செய்ய வந்த மகளிருடன், அவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்து, கலந்துரையாடினார்.

அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக இன்று (24.07.2023) முதல் 4.08.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

இரண்டாவது கட்டமாக 5.08.2023 முதல் 16.08.2023 வரை 303 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

இதனைத்தொடர்ந்து, இன்றையதினம் (24.07.2023) நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் நகராட்சி திருமண மண்டபம், சின்னவேப்பநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திருச்செங்கோடு நகராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபம், கீழேரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புதுப்புளியம்பட்டி கிராம சேவை மையம், பரமத்தி பேரூராட்சி சமுதாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்
ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுகளின் போது, விண்ணப்பங்களைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் விண்ணப்ப பதிவு முகாமில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் உறுதி செயதிடல் வேண்டுமெனவும், ஆவனங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுகளின் போது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, நகராட்சி ஆணையாளர்கள் சென்னுகிருஷ்ணன் (நாமக்கல்), ஜெயராமராஜா (திருச்செங்கோடு), வட்டாட்சியர்கள் சக்திவேல் (நாமக்கல்), பச்சமுத்து (திருச்செங்கோடு), கலைச்செல்வி (பரமத்தி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், பாஸ்கர், கஜேந்திர பூபதி, அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று (24.07.2023) நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமில் மொத்தம் 39 ஆயிரத்து 004 பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *