ஒடிபி வந்தவுடன் கால தாமதமின்றி உரங்களை விவசாயிகள் பெற்று கொள்ள வேண்டும் எனவலங்கைமான் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்.
ஒடிபி வந்தவுடன் காலகால தாமதமின்றி உரங்களை விவசாயிகள்பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலங்கைமான் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன்அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:டெல்டா மாவட்டங்களில் பயிர்களின் வளர்ச்சியிலும், மகசூல்பெருக்கத்திலும், உரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயிர்களின் வளர்ச்சிக்குதழை, மணி, சாம்பல் சத்துக்கள் அவசியமாகின்றன. இந்த சத்துக்களின் பற்றாக்குறையால் கணிசமான அளவில் மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பேரூட்ட சத்துக்கள் பொதுவாக
அடியுரமாகவும், மேலுரமாகவும் இடப்படுகிறது.
எனவே பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்து, அதன் உற்பத்தித்திறனை மேம்படுத்திட ஒரு ஏக்கருக்கு யூரியா-45
கிலோ, டி,ஏ,பி-50 கிலோ, பொட்டாஷ் -25 கிலோ
வழங்கப்படும் என குறுவை தொகுப்பு திட்டம் முன்னதாக தமிழக முதலமைச்சரால்அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் நடப்பு பருவத்தில் சுமார் 5,000
எக்டேரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ்
குறுவை சாகுபடி செய்து வரும் விவசாயிகள் பயன் பெறும் வகையில்கிராம நிர்வாக அலுவலர்ள் மூலம் விவசாயிகளிடமிருந்து சான்றிதழ் பெறப்பட்டு
விவசாயிகளுக்கு உரங்கள் பெறுவதற்கான ஒடிபி
எண்கள் வழங்கப்படுகிறது. குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் உரங்களை விவசாயிகள் பெறும் வகையில், ஆலங்குடி, அவளிவநல்லூர், கொட்டையூர், கோவிந்தகுடி, நல்லூர், பட்டம், நார்த்தாங்குடி சோத்தமங்கலம், வடகரை, ஆலத்தூர், வலங்கைமான், விடையல் கருப்பூர் மற்றும் அடவங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம்உரங்கள் விநியோகிக்கப்
பட்டு வருகிறது. எனவேகுறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் பயன் பெறும் விவசாயிகளுக்குஒடிபி வர பெற்றவுடன் காலதாமதம் இன்றி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில்உரங்களை பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.