தேனி பழைய பேருந்து நிலையம் அருகே, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணி சார்பில் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி பவானி தலைமையிலும் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதில் 500க்கும் மேற்பட்ட திமுக மகளிர் அணியினரும் திமுக கட்சியினரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.மணிப்பூர் விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார்,வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன்,
பெரியகுளம் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,தேனி ஒன்றிய குழு பெருந்தலைவர் சக்கரவர்த்தி, தேனி தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தின சபாபதி,தேனி நகரச் செயலாளர் நாராயணபாண்டியன், நகர்மன்றதலைவர் ரேணுபிரியாபாலமுருகன் துணைத் தலைவர் செல்வம் பெரியகுளம் நகரச்செயலாளர் முகமதுஇலியாஸ், நகரமன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தாமரைக்குளம் பேரூராட்சி சேர்மன் பால்பாண்டி தென்கரை பேரூராட்சி சேர்மன் நாகராஜ் வடுகபட்டி பேரூராட்சி சேர்மன் நடேசன், வீரபாண்டி பேரூராட்சி தலைவி கீதா சசி, மற்றும்மாவட்ட ஒன்றிய நகரக் கழக கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்பின் தலைவர்கள் பிரதிநிதிகள் மகளிர் அணியினர் மகளிர் தொண்டர் அணியினர் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.