திருவொற்றியூர்
மணிப்பூரில் பாஜக ஆளும் மாநிலத்தில்
கடந்த 80 நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இனக் கலவரத்தை தடுப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய பாஜக அரசு மற்றும் மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பைரவன்சிங் ஆகியோரை கண்டித்தும் மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கான ஏற்பாடை மேற்கொள்ள மாநில அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சி கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஜான் அலெக்சாண்டர், பி. நவீன் குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4வார்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன்
உலக முதல்வன் மோகன் தாஸ் சிலம்பு விஜயன் பிரபு அலெக்ஸாண்டர்
கலந்து கொண்டு மத்திய பாஜாக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.