செஞ்சி முனுசாமி தெருவில் உள்ள பரசுராமன் மற்றும் கண்ணன் என்பவரது வீடுகள் உள்ளது இரவு 12 மணிக்கு மேல் மூன்று பேர் கொண்ட கும்பல் இவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே அலசி ஆராய்ந்து வீட்டில் ஒன்றும் கிடைக்காததால் பக்கத்து தெருவில் வினோத் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு திருவிழா பார்ப்பதற்காக மேல்ஓளக்கூர் சென்று விட்டார் வீட்டில் யாரும் இல்லாததால் அவர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரொக்கம் 20000 மற்றும் கொலுசு திருடி உள்ளனர்

அதன் பிறகு தொடர்ந்து வீடு வீடாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் பெரியகரம் ரங்கசாமி தெருவில் உள்ள இளங்கோவன் என்பவர் திருசெந்தூர் கோயிலுக்கு சென்று விட்டதால் அவர் வீட்டின் முன் பக்க கதவின் பூட்டை உடைத்து ஐந்தரை பவுன் நகை கொள்ளை அடித்து சென்று விட்டனர் மேலும் இதே தெருவில் தேவேந்திரன் வீட்டை உடைத்து பார்த்தனர் அங்கு ஒன்றும் சிக்காததால் பீரோவில் உள்ள துணிகளை வெளியில் எரிந்து விட்டு சென்றுள்ளனர்

மேலும் இதே தெருவில் நாகராஜ் என்பவர் வீட்டின் வெளிப்பக்க பூட்டை உடைத்து ரூபாய் 3000 கொள்ளையடித்து சென்றுள்ளனர் தகவல் அறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை பதிவு செய்யப்பட்டது மேலும் மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டு போலீசார் ரோந்து வந்தனர் ராக்கி பைபாஸ் சாலைவரை ஓடி யாரையும் பிடிக்கவில்லை போலிசார் தெடர்ந்து விசாரித்து வருகின்றனர்
செஞ்சி நகர மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் இந்த கொள்ளை கும்பலை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *