சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பைகான போட்டிகள் ஒரு மாத காலமாக நடைப்பெற்று வருகிறது இந்நிலையில்கிராம கமிட்டி மேல் நிலைப் பள்ளியில் பயிலும் மாணவி ஐஸ்வர்யா1500 மீட்டர் தடகளப் போட்டியில்
கலந்து கொண்டுஇரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்து ரூபாய் 75,000 பரிசு தொகை பெற்றுள்ளார்.
இவ் மாணவி ஐஸ்வர்யாவை தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் வரவழைத்து பாரட்டினார்.
இந்த நிகழ்வில்மாவட்ட உடற் கல்வி அலுவலர் வினு, பள்ளி தலைமை ஆசிரியர் குகன், உடல் கல்வி ஆசிரியர் சிவகுமார், மற்றும் சரவணக்குமார்,மாணவியின் பெற்றோர் சண்முகவேல்
ஆகியோர் உடனிருந்தனர்.
வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவி ஐஸ்வர்யா வை பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.