பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் 85 ஆவது பிறந்தநாள் விழா ஜெயங்கொண்டத்தில் கொண்டாடப்பட்டது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா அருகில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 85-வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 மரக்கன்றுகளும், இனிப்பும் வழங்கி மாவட்ட செயலாளர் கேபிஎன் ரவி மற்றும் மாநில வன்னியர் சங்க செயலாளர் வைத்தி ஆகியோர் தலைமையில் கொண்டாடப்பட்டது.
இதில் பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் அய்யா வாழ்க வாழ்க என கோஷமிட்டு 1000 மரக்கன்றுகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இதில் பாமக மாவட்ட தலைவர் சின்னதுரை, மாநில துணைத்தலைவர் ராமதாஸ், காடுவெட்டி சின்னப்பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் மருதூர் பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார் ஜெயங்கொண்டம் நகர் மன்ற உறுப்பினர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கலியபெருமாள், ஆச்சி இளங்கோவன், சங்கர், இனிது ராஜ், ராமநாதன், தங்கராசு, தினகரன்,புக்குழி இராமச்சந்திரன், பனையடி கொளஞ்சி, உடையார்பாளையம் நகர செயலாளர் மதியரசன், வரதராஜன்பேட்டை நகர செயலாளர் அந்தோணி ராஜ்,
ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய துணைத் தலைவர் தேவாமங்கலம்
ஆ. குமார், கரடிகுளம் சுதாகர் ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் ரெங்க. வினோத் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக் கழக பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக ஜெயங்கொண்டம் நகரச் செயலாளர் பரசுராமன் நன்றியுரை வழங்கினார்.