தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம்
ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை கோபால் தலைமையில்
நடைபெற்றது.

கூட்டத்திற்க்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர் .

இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை சார்பில் மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது,
தர்மபுரி முதல் ஓசூர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை பாலக்கோடு நகர்பகுதியை ஒட்டி உள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்திற்க்கு ஏதுவாக இருக்க பி.கொல்லஅள்ளி முதல் எர்ரனஅள்ளி சாலை வரை இருபுறங்களிலும் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்,ரெட்டியூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக குடிநீர் பைப் லைன் அமைக்க வேண்டும்,அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள நீர் வழிக்கால்வாய் ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்,பி.செட்டி அள்ளி ஊராட்சி மாரிக்கான் கொட்டாயில் பழுதாகி உடைந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள தெருவிளக்கு மின் கம்பங்களை உடனே மாற்ற வேண்டும்,கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழா கண்ட சமுதாய திருமண மண்டபங்களுக்கு, மின்சார இணைப்பு, குடிநீர் இணைப்பு, சமையல் பாத்திரங்கள், நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் மண்டபங்கள் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது எனவே இதற்கான அடிப்படை வசதிகளை உடனே செய்து தர வேண்டும்,பி .செட்டிஅள்ளி ஊராட்சியில் உடையும் தருவாயில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளை கட்ட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் , துணைச் சேர்மன் பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் அழகுசிங்கம், முத்துசாமி, முத்தப்பன், நஞ்சுண்டன், ஜோதி, சரண்யா, உள்ளிட்ட கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *