சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் அசத்திய மாணவர்கள்
ரூபாய் 500 பணபரிசு பெற்ற மாணவருக்கு சிறப்பு பாராட்டுகள்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப்பள்ளியில்சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் முதல் பரிசினை வென்ற மாணவர்களுக்கு பரிசுகளும்,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நடைபெற்ற சிவபுராணம்,தேவாரம் ஒப்புவித்தல் போட்டிகளில் வெற்றி பெற்று முதல்,இரண்டாம் பரிசுகளை வென்ற தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இப்பள்ளியின் யோகேஸ்வரன் என்ற மாணவர் சிவபுராணத்தை மிக அருமையாக கூறியதை பாராட்டி சிவகங்கை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை அலுவலர் நாகராஜன் ரூபாய் 500 பணப்பரிசினை வழங்கி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.