கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
திருவலஞ்சுழியில்
மணிப்பூர் குக்கி இனத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடி மக்களை அழித்து ஒழிப்பதற்காக மெய்தி இனத்தின் பெரும்பாண்மை மக்களை இந்துமத வெறியூட்டி கருவியாக பயன்படுத்தி வரும் மக்கள் விரோத பாரதீய ஜனதா அரசாங்கத்தை எதிர்த்து சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சி சார்பில் கண்டன முழக்கப் போராட்டம் …..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி கடைவீதியில் மணிப்பூரில் குக்கி இனத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடி மக்களை அழித்து ஒழிப்பதற்காக மெய்தி இனத்தின் பெரும்பாண்மை மக்களை இந்துமத வெறியூட்டி கருவியாக பயன்படுத்தி வரும் மக்கள் விரோத பாரதீய ஜனதா அரசாங்கத்தை எதிர்த்து சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை கட்சி சார்பில் கண்டன முழக்கப் போராட்டம் நடைப்பெற்றது.
இப் போராட்டத்தில் சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் மாநகரச் செயலாளர் சங்கர், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் , வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைச் சங்கம் மாவட்ட செயலாளர் கோபி, திருவலஞ்சுழிகிளைச் செயலாளர் எம் .சங்கர் ஆகியோர் தலைமை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் விடுதலை குமரன் ,தஞ்சை மாவட்ட செயலாளர் அருணாட்சலம், ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதில் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கண்டன முழக்கமிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.