தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசு நுகர்வோர் வாணிப கழகத்தின் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.
பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார் ரிப்பன் வெட்டி நெல்கொள் முதல் மையத்தை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திமுகவடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் வடக்கு ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டியன் ஒன்றிய குழு பெருந்தலைவர் தங்கவேல்,
நுகர் பொருள் வாணிபக் கழக முதல் நிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் நெல் கொள்முதல் அலுவலர் கதிரவன் உதவி மேலாளர் மணி பாண்டி திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ்,தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி பணி நியமன குழு தலைவர் பாலாமணி பழனி இந்து அறநிலையத்துறை மாவட்ட குழு உறுப்பினர் காஞ்சி வனம்,வடுகபட்டி பேரூர் செயலாளர் காசி விசுவநாதன் ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் விவசாய சங்க தலைவர்கள் பிரதிநிதிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் யாருக்கும் பணம் தர வேண்டாம் கொள்முதல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவுகள் அரசே வழங்குவதால் விவசாயிகள் யாரும் எதற்காகவும் பண வழங்க வேண்டாம் என மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.