வலங்கைமான் அருகே மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர்….
பாரதிதாசன் பல்கலைக்கழக மான்பமைத் துணை வேந்தர் முனைவர் செல்வம் அவர்களின் வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் வெற்றி வேல் அவர்களின் ஆலோசனைப் படியும், திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், தொழுவூரில் உள்ள அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சொசைட்டி யின் சார்பாக , மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் திருவாரூர் மாவட்ட அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் அக்கல்லூரியின் கலை அரங்கத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் பாலச்சந்தர் வரவேற்புரைவழங்கினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜான் லூயிஸ் தலைமை தாங்கினார்.துனை முதல்வர் திரு.வேல்முருகன் ,இம்முகாமினை துவங்கி வைத்தார்.
திருவாருர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி யின் செயலாளர் திரு வரதராஜன் சிறப்புரைஆற்றினார்.
இந்நிகழ்வில் குடவாசல் கிளை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி யின் தலைவர் திரு அசோகன், கணக்கர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்முகாமினை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் செந்தில் கணேஷ் அவர்களின் தலைமையிலான மருத்துவகுழு மருத்துவர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.இம்முகாமில் 100 மேற்பட்ட கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இறுதியாக மஞ்சக் குடி சுவாமி தயானந்த கல்லூரியின் பேராசிரியரும் மாவட்ட யூத் ரெட் கிராஸ் சொசைட்டியின் ஒருங்கிணைப்பாளருமாகிய திரு ஏழுமலை நன்றி கூறினார்