சென்னையில் நடைபெறும் ஆசிய ஆண்கள் ஹாக்கி சாம்பியன் ஷிப்போட்டி கோப்பையை ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பொதுமக்களுக்கு நாமக்கல்லில் அறிமுகப்படுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ”ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023” போட்டியினை சிறப்பாக நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.17 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.

7-வது ”ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் – 2023” ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரிய ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன.

நாமக்கல் நகராட்சி, குளக்கரையில், 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 போட்டிக்கான கோப்பையை, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில்,

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேற்று (27.07.2023) அறிமுகப்படுத்தி, “பொம்மன் இலச்சினை” (Bomman Mascot) வெளியிட்டார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா அப்போது பேசியதாவது:
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் தலைமையில் 20.07.2023 அன்று சென்னை, மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம் (Marha Light House) அருகில் 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 கோப்பை, “பொம்மன் இலச்சினை” (Bomman Mascot) அறிமுகம் மற்றும் “பாஸ்திபால்” (Pass the Ball) தொடக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆசிய கோப்பையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டும் செல்லும் வகையில் ”பாஸ் தி பால்” கோப்பை (Pass the Ball Trophy Tour) சுற்றுப் பயணத்தை தொடங்கி வைத்தார்கள்.

மேலும் ஆசிய கோப்பை பொம்மன் இலச்சினையை (Bomman Mascot) அறிமுகப்படுத்தினார்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக நடத்தப்படும்
7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 கோப்பை சென்னையில் 03.08.2023 முதல் 12.08.2023 வரை நடைபெற உள்ளது.

இந்த போட்டி 16 – வருடங்களுக்குப் பிறகு நமது தலைநகரம் (சென்னையில்) நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

”பாஸ் தி பால்” கோப்பை (Pass the Ball Trophy Tour) கன்னியாகுமரி முதல் சென்னை வரை பயணம் செய்வதையொட்டி, விழிப்புணர்வு நிகழ்வு நடைபெறவுள்ளது.

22.07.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கி 26.07.2023 அன்று வரை திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ”பாஸ் தி பால்” கோப்பை (Pass the Ball Trophy Tour) கோப்பை மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்றையதினம் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கிஈரோடு மாவட்டம் வந்தடைந்து தற்போது ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் – 2023 கோப்பை நாமக்கல் வந்துள்ளது என்பது நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இளைஞர்கள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, ஆசிய ஆடவர் சாம்பியன்ஷிப் – 2023 கோப்பை சேலம் மாவட்டத்திற்கு இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணமாலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்பட்டு இறுதியாக வரும் 31.07.2023 அன்று சென்னை சென்றடையவுள்ளது.

01.08.2023 அன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
எனவே, ”பாஸ் தி பால்” கோப்பை (Pass the Ball Trophy Tour) கோப்பைசுற்றுப் பயணம் வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா கூறினார்

தொடர்ந்து, 7-வது ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் – 2023 போட்டிக்கான கோப்பையை இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், விளையாட்டு வீரர்கள். வீராங்கனைகள் பொதுமக்கள் பார்வையிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் எஸ்.கோகிலா, அரசுத்துறை சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஹாக்கி சங்க பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *