காட்டு யானைகளால் விவசாய பயிர்கள் நாசம் விவசாயிகள் வேதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அரிசிகுப்பம் பகுதியில் காட்டு யானைகள் விவசாய நிலத்தில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி உள்ளது விவசாயிகள் வேதனை சந்திரப்பா என்பவருடைய நிலத்தில் ஒரு ஏக்கர் தக்காளி அரை டன் கொய்யா விற்பனைக்காக வாகனத்தில் ஏற்ற வைத்திருந்த 85 கிரேடு 25 கிலோ கொண்ட தக்காளி யானைகள் உண்டு சேதப்படுத்தி உள்ளது
வீட்டின் மேல் குறை சிமெண்ட் சீட் நான்கு சேதப்படுத்தியும் அதே பகுதியை சேர்ந்த ரவி ஒரு ஏக்கர் தக்காளி பயிரை சேதப்படுத்தி உள்ளது 1 ஏக்கர் பீன்ஸ் பயிரிட வைத்திருந்த குச்சி தோட்டத்தை சேதப்படுத்தியும் சரத் விவசாயி ஒரு ஏக்கர் தக்காளி தோட்டத்தை சேதப்படுத்தியும் பசுபதி தக்காளி தோட்டத்தை ஒன்றை ஏக்கர் சேதப்படுத்தியும் ராஜ் அண்ணா தக்காளி தோட்டத்தை ஒரு ஏக்கர் சேதப்படுத்தியும் வெங்கட்ராஜ் ஒரு ஏக்கர் தக்காளி தோட்டத்தை காட்டில் இருந்து வந்த யானைகள் சேதப்படுத்தியும் உள்ளது
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை திம்மசந்திர வனப்பகுதியில் இருந்து வரும் காட்டு யானைகளை வனத்துறை அதிகாரிகள் தினம் தோறும் பாதுகாப்புடன் கண்காணித்து விவசாய பயிர்களை அழிக்க வரும் யானைகளை விரட்டி அடிக்க வேண்டும் வனத்துறை அதிகாரிகளுக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் சேதமான விவசாயி பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் காட்டுப் பகுதிகளை சுற்றிலும் சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் உள்ளிட்ட குறைகளை முன்வைத்து மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ் ரெட்டி நாராயணன் துணைச் செயலாளர் இளைஞர் அணி பாபு ஒன்றிய செயலாளர் கெலமங்கலம் பாபு ரெட்டி ஒன்றிய செயலாளர் கிழக்கு ஒன்றியம் ரவி வசந்தா மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் காட்டு யானைகள் சேதப்படுத்திய விவசாய பயிர்களை பார்வையிட்டு விவசாயிகள் சார்பாக தமிழக அரசுக்கு காட்டு யானை சேதாரத்திற்கு நிவாரணம் வழங்க கோரி கோரிக்கை வைத்தனர்