திருவொற்றியூரில் சுகாதாரம் குறித்த பள்ளி மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
சென்னைமாநகராட்சி,திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டு அம்பேத்கர் நகரில் குப்பைகளை பிரித்து கொடுப்பது குறித்த பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வார்டு கவுன்சிலர் சாமுவேல் திரவியம் தலைமையில் இதில் சுற்றுப்புறம் நமது தூய்மை-சுகாதாரம் நமது கடமை என்ற தலைப்பில் பாடல், நடனம், கரகாட்டம்,சிலம்பாட்டம்,ஒயிலாட்டம்போன்ற பல்வேறு நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும்-மக்காத குப்பைகளாக பிரித்து கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து மாணவ மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சிறிய தூரம் ஊர்வலமாக வந்தனர். மாணவ மாணவிகளின் பல்வேறு வகையான போட்டிகளும் நடைப்பெற்றது.இதில் மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அப்பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு மனு அளித்தனர் அதனை உடனடியாக சரி செய்து தருவதாக மாமன்ற உறுப்பினர் சாமுவேல் திரவியம் தெரிவித்தார்.இதில் திருவொற்றியூர்