வலங்கைமான் அரசினர் பலவகை தொழில் நுட்ப
கல்லூரியில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அரசினர்
பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் சேர்ந்துள்ள
முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில்தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்விஉதவித்தொகை குறித்துஎடுத்து கூறப்பட்டது. நிகழ்ச்சியில்முதலாம்ஆண்டில்சேர்ந்துள்ள300மாணவர்களின் பெற்றோர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வுகூட்டத்திற்கு கல்லூரியின் முதல்வர்ஜான் லூயிஸ் கலந்து கொண்டுகல்லூரியின் விதிமுறைகள் மற்றும்
கற்றலின் அவசியம் குறித்து பேசினார்.
தொடர்ந்து முதல்வரின் நேர்முக உதவியாளர்
வேல்முருகன் மற்றும் முதலாம் ஆண்டு ஆசிரியர்கள் மற்றும்
சப்போர்ட்டிங் பணியாளர்களும் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு-முதலாம் ஆண்டு வகுப்பு ஆசிரியர்களை பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்தும், கல்லூரியில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்,
பாலிடெக்னிக் கல்லூரியின் படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள்,தமிழக அரசு மூலம் மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வி உதவித்தொகை குறித்த
விபரங்கள், மாணவர்களின் வருகை பதிவேடு அவசியம் குறித்த விவரங்கள் இவற்றோடு முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள மாணவர்களில் தற்போது நடைபெற்று முடிந்த முதல் சுழற்சி தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தல் உள்ளிட்ட
நிகழ்வுகளை முதலாம் ஆண்டு ஆசியர்கள் அனைவரும் தொகுத்துவழங்கினர்.முதலாம் ஆண்டு துறைத்
தலைவர் முனைவர் முருகன் நன்றி கூறினார்.