கோவை
தனியார் அமைப்பு மற்றும் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி சார்பில் உலக ஆறுகள் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது.
உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் தனியார் அமைப்புகள் சார்பில் NGO க்கள் சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக உலக ஆறுகள் தினத்தை முன்னிட்டு கோவையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி மற்றும் விளையாட்டுத்துறை சேர்மன் மாலதி உட்பட கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சித்தாபுதூர் அரசு பள்ளி மாணவர்களிடையே உலக ஆறுகள் தினம் குறித்தும், ஆறுகளை பாதுகாப்பது குறித்தும் உரையாற்றப்பட்டது.