எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் 30 பயனாளிகளுக்கு சிறிய வகை டிராக்டர் வழங்கி விவசாயிகளுடன் இணைந்து பிறந்த நாள் கொண்டாடிய சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் .

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோயிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு பவர் ட்ரில்லர் என்னும் சிறிய வகை டிராக்டர் வழங்கும் விழா நடந்தது உதவி பொறியாளர் ராஜாராம் தலைமை வகித்தார்
இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சீர்காழி தொகுதியில் உள்ள 40 விவசாயிகளுக்கு ரூபாய் 85 ஆயிரம் மானியத்துடன் கூடிய சிறிய வகை பவர் டில்லர் டிராக்டரை வழங்கி சிறப்புரையாற்றினார்
விழாவில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதி தேவேந்திரன் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் பேரூர் கழக செயலாளர் அன்பு செழியன் மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழாவின் நிறைவில் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தனது பிறந்த நாளை அங்கு வந்திருந்த விவசாயிகளுடன் இணைந்து கேக் வெட்டி அவர்களுக்கு பகிர்ந்து தனது பிறந்த நாளை எளிமையாக கொண்டாடியது விவசாயிகளிடமும் வரவேற்பை பெற்றது