பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் வழங்கும் நிகழ்ச்சி சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பாக. வேளாண் இயந்திரமயமாக்கல் துணை இயக்கத் திட்டம் (SMAM), குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டம் 2023-இன் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம், விவசாயிகளுக்கு மானியத்தில் பவர் டில்லர்களை, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில், காணொளிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை சார்பாக, அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மூலம், தலா 85 ஆயிரம் வீதம் 26 விவசாயிகளுக்கு, ரூபாய் 21 லட்சத்தி 62 ஆயிரம் மானியத்தில், 26 பவர் டில்லர்களை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா விவசாயிகளுக்கு வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர்கள் கே வி கலைச்செல்வன் சுமதி கண்ணதாசன் ஒன்றிய செயலாளர்கள் தாமரைச்செல்வன்,நாசர் , சுவாமிமலை பேரூர் தலைவர் ஃபுர்கான் , பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் நேர்முக உதவியாளர் ரிஃபாயி மற்றும் கழக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்