வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் .2024 ம் வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை கூட்டம் வாடிப்பட்டி பேரூர் அதிமுக சார்பில் வாடிப்பட்டியில் நடைபெற்றது.
க்கூட்டத்திற்கு வாடிப்பட்டி பேரூர் செயலாளர் முனைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார்.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பையா. மாணிக்கம், வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் காளிதாஸ், மதுரை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஸ்கண்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிங்கராஜ் பாண்டியன், மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி உள்ளிட்டோர் பேசினர்.இதைதொடர்ந்து மதுரை புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பூத் கமிட்டி நியமன நோட்களை நிர்வாகளிடம் வழங்கி சிறப்புரையாற்றி பேசுகையில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு திட்டத்திற்கு மூடுவிழா நடத்த துடிக்கும் மக்கள் விரோத திமுக அரசு நீட் தேர்வு ரத்து எனும் பொய்யை இன்னும் எத்தனை தேர்தலுக்கு பயன்படுத்துவர் எனத் தெரியவில்லை.
ஐக்கிய நாடுகள் சபையில் சென்று சத்துணவு திட்டத்திற்கு வித்திட்டது யார் என்று கேட்டால் கூட புரட்சித் தலைவர் பெயரை சொல்வர். எனவே திட்டப் பலகையை மறைத்தாலும் புரட்சித் தலைவர் புகழை மறைக்க முடியாது என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதையொட்டி மீண்டும் கழக ஆட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் அமையவுள்ளது மக்கள் திமுக ஆட்சி மீது மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
எனவே ஒற்றுமையுடன் பாடுபட்டால் கழக ஆட்சி அமைவது உறுதி என்றும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில்
பேரூர் கழக நிர்வாகிகள் சந்தனதுரை.முத்துகண்ணு. மகளிரணி லெட்சுமி ஜோதி. உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் தனசேகரன் நன்றி கூறினார்.