கோவையில் சுமார் 75 ஆண்டு காலம் நிறைவு செய்த தேவாங்க மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது…
கோவை பூமார்க்கெட் பகுதியில் கடந்த 1948 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாண முதலமைச்சர் ஓ.பி.ராமசாமி செட்டியாரால் துவங்கப்பட்ட பள்ளி தேவாங்க மேல்நிலைபள்ளி…பல்வேறு வரலாற்று சம்பவங்களை கொண்டுள்ள இப்பள்ளிக்கு ஜவகர்லால் நேரு,ராஜாஜி,காமராஜர் போன்ற தலைவர்கள் இந்த பள்ளிக்கு வருகை புரிந்துள்ளனர்.
இந்நிலையில் இப்பள்ளியில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக இதே பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்கள் சார்பாக ஆசிரியர்கள் தின விழா நடைபெற்றது.முன்னால் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் ஆத்மலிங்கம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,உப தலைவர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார்.
செயலாளர் பசுபதி,இணை செயலாளர் முருகானந்தம்,பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினர்.தொடர்ந்து பள்ளியின் பல்வேறு கட்ட வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தேவாங்க கல்வி கழகத்தின் தலைவர் விஜயகுமாருக்கு வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கல்வி எனும் உன்னத பணியை செய்யும பள்ளி ஆசிரியர்கள் ய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
பள்ளியின் 75 ஆண்டு கால பவள விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற இதில்,இதே பள்ளியில் பயின்று ஆசிரியர்களாகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் கவுரவிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.. இந்நிகழ்ச்சியில்,சிவானந்தம்,மனோகரன்,நாகராஜ்,சுகுமாரன்,கணேசன்,சிவராமன்,கார்த்திகேயன்,மருதாசலம்,பிரேம் குமார் உட்பட ஆசிரிய,ஆசிரியைகள்,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்…