பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள
மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
இதில் மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் கல்லூரி செயலர் கமல்பாபு முன்னிலை வகித்து பேசினார், முதல்வர் திருமதி விஜி அவர்கள் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் மாணவி லட்சுமி தேவி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த மாணவிகள் ஆசிரியர்கள் தின விழா பற்றி சிறப்பாக பேசினர்.
மேலும் மாணவிகள் நடனம், நாடகம், பாடல், கவிதை ஆகிய மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தபட்டு பரிசுகள் வழங்கபட்டது.
விழாவின் இறுதியில் மாணவி அகல்யா நன்றி கூரினார் முன்னதாக மாணவி ஆர்த்தி வரவேற்றார் நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஏற்ப்பாடுகளை ஜெயஸ்ரீ மற்றும் ஸ்வாதிகா உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்