கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள காவல் துறையினரின் சார்பாக பள்ளிக்குழந்தைகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது
அதேபோல வால்பாறை அருகே உள்ள முருகன் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் தலைமையில் காவலர் உதயா குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் சாலைகளில் எவ்வாறு விதிகளை பின்பற்றி செல்லவேண்டும் என்றும், அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் சொற்படி கீழ்படிந்து நடக்கவேண்டும் அதேபோல அறிமுகம் இல்லாத நபர்களினால் ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலோ ஏதேனும் அத்து மீறல்களுக்கு முற்பட்டாலோ காவல் துறையினரின் அவசர கால தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும், வகுப்பறையில் கவனமுடன் பாடங்களை கற்று எதிர்காலத்தில் சிறந்த பொறுப்புக்களில் அமர்ந்து பெற்றோருக்கு உதவி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை விரிவாக எடுத்துக்கூறி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இந்த விழிப்புணர்வு நிகழ்சியில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்