பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் ….
தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் நலப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் பூபதிராஜா பங்கேற்பு ….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பிற்படுத்தப்பட்டோர் நலப்பிரிவு மாநில பொதுச் செயலாளர் பூபதிராஜா பங்கேற்று ஆசிரியர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.
இதில் ஆசிரியர்கள் குறித்த பெருமையையும் பங்களிப்பை பற்றியும் விவரித்து பேசினார்..
மேலும் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பாபநாசம் நகர காங்கிரஸ் தலைவர் பாலாஜி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.