வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கோவை மத்திய சிறையில் வ.உ.சி.இழுத்த செக்கிற்கும்,வ.உ.சி.மைதாதினத்தில் உள்ள அவரது சிலைக்கும் மலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது…
வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலரும் வ.உ.சிதம்பரனாரின் புகைப்படம் மற்றும் சிலைகளுக்கு மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் திரையுலகின் முன்னனி நடிகரின் விஜய்யின் இயக்கமான விஜய் மக்கள் இயக்கத்தினரும் வ.உ.சி.பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அதன் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தலின் படி கோவை மத்திய சிறையில் வ.உ.சி இழுத்த செக்கிற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
கோவை தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கோவை விக்கி,தலைமையில் நடைபெற்ற இதில், தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு முன்னிலை வகித்தார்.தொடர்ந்து,கோவை வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்..
இந்நிகழ்ச்சியில்,கோவை தெற்கு மாவட்ட தலைமை தொண்டரணி தலைவர் கிரிஷ்,எட்டிமடை பாலு,பூ மார்க்கெட் கார்த்திகேயன், மாரி ராஜ்,அருண்குமார் செந்தில்குமார் சரவணன்,ரோஹித் விக்னேஷ்குமார், பாலாஜி, மகளிரணி லதா,ஸ்டீபன், அனீஸ்தீன்,பிரபு டேனியல்,ஆண்டனி தாஸ்,ஆஷிக், குமார்,ராம்குமார்.உட்பட பலர் கலந்து கொண்டனர்…