மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை அறிவு திருக்கோயில், மனவளக்கலை மன்றத்தில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு துணை பேராசிரியரும் காரமடை மன்ற தலைவருமான ராஜ்குமார் தலைமை ஏற்றார், அருள்நிதி மாசிலாமணி இறை வணக்கம், குரு வணக்கம் பாடி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார், அருள்நிதி அமரகவி வரவேற்புரையாற்றினார்,மனைவி நல வேட்பு விழா குறித்து பேராசிரியர் துரைசாமி வேதாத்திரிய சிறப்புரையாற்றினார்,
பேராசிரியை திருமதி வளர்மதி துரைசாமி சிறப்பு தம்பதியரை கௌரவித்தார்.
நிறைவாக துணைப்பேராசிரியர் சுரேஷ்குமார் நன்றி உரையாற்றினார் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தம்பதியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,
நிகழ்ச்சிகளை துணை பேராசிரியரும் மனவளக்கலை மன்ற பொறுப்பாளருமான முத்து சங்கர், துணை பேராசிரியர்கள் சாந்தி, பூங்கோதை கோமதி பிரசாத்உள்ளிட்டோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்