வணிக ரீதியாக அல்லாமல், தமிழர்களின் கலை இலக்கியம் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துக்களை கூறும் வகையில் கே கே வி மீடியா சார்பாக ஆவணப்படங்கள் குறும்படங்கள் தயாரிக்க உள்ளதாக சிறந்த கல்வி படமாக தேசிய விருது பெற்ற சிற்பிகளின் சிற்பங்கள் ஆவணபடத்தின் தயாரிப்பாளர் டி.கே.சந்திரன் கோவையில் தெரிவித்துள்ளார்..

பிரபல திரைப்பட தொகுப்பாளரும்,இயக்குனருமான பி.லெனின் இயக்கிய சிற்பிகளின் சிற்பங்கள் எனும் ஆவணப்படம் சிறந்த கல்வி படமாக தேர்வு செய்யப்பட்டு அண்மையில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது..

கல்வி கொடுத்த ஆசிரியர்களை நினைவு கூறும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படம் சமுதாய முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பை எடுத்து கூறும் வகையில் பல்வேறு தரப்பினர்களின் பாராட்டை பெற்றது.

கே.கே.வி.மீடியா தயாரித்துள்ள இந்த ஆவணப்படம் குறித்து,படத்தின் தயாரிப்பாளரும், ஆவணப்படத்தை உருவாக்க காரணமான பிரபல தயாரிப்பாளரும்,சென்னை சில்க்ஸ்,ஸ்ரீகுமரன் தங்க மாளிகை போன்ற பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் டி.கே.சந்திரன் மற்றும் படத்தின் இயக்குனர் பி.லெனின் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது பேசிய டி.கே.சந்திரன் தாம் பத்தாம் வகுப்பு பயின்ற போது தமக்கு பாடம் நடத்திய ஆசிரியரை நினைவு கூர்ந்து அவரையே ஆவணப்படமாக எடுத்த நிலையில்,அவர் ஒருவர் மட்டுமின்றி பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்கிய பல ஆசிரியர்களை இதில் உட்படுத்தி லெனின் படமாக்கி உள்ளதை குறிப்பிட்டு பேசிய அவர்,ஆசிரியர் பணி எனும் உன்னத சேவைக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த ஆவணப்படத்தை தயாரித்து,அதற்கு தேசிய விருதும் கிடைத்ததில் தாம் மிக்க மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,வரும் காலங்களில்,வணிக ரீதியாக அல்லாமல் , சமூக செயல்பாடுகள் விழிப்புணர்வு கலை இலக்கியம் பல்துறைகள் சார்ந்த கருத்துக்களை வெகுஜன மக்களுக்கு கொண்டு சேரும் வகையில் இனி வரும் காலங்களில் கே கே வி மீடியா சார்பாக ஆவணப்படங்கள் குறும்படங்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்..இந்த சந்திப்பின் போது க்ளஸ்டர் மீடியா அரவிந்த்,உட்பட ஆவணபடத்தில் பணியாற்றியவர்கள் உடனிருந்தனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *