நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் காவல் நிலையத்தில் பா.ஜ.க., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில், அதன் நகரத் தலைவர் பெருமாள் தலைமையிலான கட்சியினர்,
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, கொரோனாவை போல் ஒழித்து கட்ட வேண்டுமென இந்துக்களின் மனதை புண்படுத்தும் படியும், இந்துக்களின் மத உணர்வுக்கு தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடனும் பேசியுள்ளார். அவர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தனர்.
அப்போது, ஆன்மீக மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு செயலாளர் மோகன், ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் செல்வம், நாமக்கல் கிழக்கு மாவட்டம் பொதுச் செயலாளர் சேதுராமன், நகர தலைவர் வேலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.