இல்லம் தேடிக் கல்வி மைய தன்னார்வலருக்கு இ சேவை மையம் தொடங்க வாய்ப்பு.
கந்தர்வகோட்டை
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மா. மஞ்சுளா அவர்களின் வழிகாட்டுதலின்படி
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் மெய்க்குடிப்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி மையத்தை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா பார்வையிட்ட பொழுது ரஞ்சனி, லாவண்யா, தேவி, ரம்யா ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது. மாணவர்களின் கற்றல், கற்பித்தல் முறைகள் உற்று நோக்கப்பட்டது.
அப்போது தன்னார்வலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசும்போது இல்லம் தேடி கல்வி மைய செயலியில் தன்னார்வலர்களுக்கு இ சேவை மையம் தொடங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ள தன்னார்வலர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இ-சேவை மையம் தொடங்குவதற்கான வழிமுறைகள் அதில் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பின்பற்றி தன்னார்வலர் இ சேவை மையம் தொடங்கலாம் .
இ சேவை மையம் தொடங்குவதற்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தன்னார்வலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தன்னார்வலர்கள் மாதம் தோறும் நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் கலந்து கொண்டு ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கலந்துரையாட வேண்டும். மாணவர்களுக்கு தொடர்ந்து வாசிப்பு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் வருகை பதிவை செயலியில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.