அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அவதூறாக பேசி தலைக்கு 10 கோடி என்று அறிவித்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியாவின் 4 அடி உயர உருவ பொம்மையை எரித்து கண்டன கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அலங்கை ஒன்றிய செயலாளர் அகத்தியன் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் கார்த்திக், தலித் ராஜா, வீராசெல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தமிழ் குமரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநகர் மாவட்ட செயலாளர் லட்சுமி சசிகுமார், மாவட்ட கொள்கை பரப்பு செய்லாளளர் சாந்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், தூய்மை தொழிலாளர் அணி முத்துசிவா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.