கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே 15 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்ட இ- சேவை மையம் ….
மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கேட்டால் நாளை திறக்கப்படும் என நக்கலாக பதில் அளித்த கிராம ஊராட்சி அலுவலர் ….
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை……
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் சுமார் 15 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட இ- சேவை மையம் இதுவரை திறக்கப்படாததால் , பள்ளி, கல்லூரி மாணவர்களும் மற்றும் பொதுமக்களின் தேவையான சான்றிதழ்கள், மற்றும் தமிழக அரசின் அறிவிப்புகளை தெரிந்து கொள்வது உட்பட பல்வேறு தேவைகளுக்கும் பொதுமக்கள் சான்றிதழ் பெற்று வந்த நிலையில், இ- சேவை மையம் கட்டிடம் பூட்டப்பட்டதால், சரியாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
மேலும் திருவலஞ்சுழி மற்றும் அதனை சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினசரி ஏதேனும் தேவையான சான்றிதழ்கள் பெற மிகவும் சிரமத்திற்கு உள்ளாக்கபடுகிறார்கள், தற்போது கும்பகோணம் வரை சென்று ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கூட ஏதேனும் முக்கியமான சான்றிதழ்கள் பெற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஊராட்சிமன்ற தலைவரோ இதுவரை கண்டுகொள்ளவில்லை எனவும், இது சம்பந்தமாக கிராம ஊராட்சி அலுவலரிடம் பொதுமக்கள் ஏன் பயன்பாட்டிற்கு வரவில்லை என கேட்டால் நக்கலாக நாளை திறக்கப்படும் என சிரித்தப்படொ கூறி சென்றதாகவு. மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு செய்யாமல் ..அரசின்மீது மக்களிடையே எதிர்ப்பை உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு அலட்சியம் செய்யும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் மீதும் ,நக்கலாக பதிலளித்த ஊராட்சி அலுவலர்மீதும் துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு திருவலஞ்சுழி கிராமத்தில் நீண்ட ஆண்டுகளாக பூட்டி கிடக்கும்இ -சேவை மைய கட்டிடத்தை சீரமைத்து மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென அந்தப் பகுதியின் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பேட்டி..செந்தில்குமார்,
திருவலஞ்சுழி