உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு கோவை பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் ராஜராஜன் கலந்து கொண்டார்…
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ந்தேதி உலக பிசியோதெரபி தினம் அனுசரிக்கப்படுகிறது… மருந்துகள் இல்லாமல் துணை மருத்துவ சிகிச்சையாக செய்யப்படும் பிசயோதெரபி சிகிச்சை முறை பொதுமக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரியில் பிசியோதெரபி தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
எஸ்பெரன்ஸா எனும் தலைப்பில் நடைபெற்ற இவ் விழாவில்,பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு தலைமை தாங்கினார்.
தாளாளார் சாந்தி தங்கவேலு,அறங்காவலர் அக்ஷய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகர போக்குவரத்து காவல் துறை துணை ஆணையர் ராஜராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போதுஅவர்,பிசியோதெரபிசிகிச்சையின்முக்கியத்துவத்தையும்,இந்த துறையில், அதிகரித்து வரும் வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசினார்.தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்,பிசியோதெரபி துறையில் சிறந்து செயல்பட்டு வரும் கோவையை சேர்ந்த டாக்டர் செந்தில் குமார் ஐகான் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார்..
பின்னர்,கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது..
விழாவில்,பி.பி.ஜி.பிசியோதெரபி கல்லூரி முதல்வர் சிவக்குமார்,துணை முதல்வர் பிரதீபா ,ஆசிரியர்கள் உட்பட மாணவ,மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்…