தென்காசி மாவட்டம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா நடைப்பெற்றது.

ஆலங்குளம் ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார்.

ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் திட்ட இயக்குனர் ஜோஷ்பின் சகாய பிரமீளா, ஆலங்குளம் வட்டார உணவு பாதுகாப்புத் துறை (பொறுப்பு) அலுவலர் மஹாராஜன், ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம்வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்களநாயகி வரவேற்புரை வழங்கினார் ஆலங்குளம் வட்டார யோகா நல பயிற்றுநர் பால சுப்பிரமணியன் புதுமண தம்பதியினருக்கு யோகா பயிற்றுவித்தார்

நடைபெற்ற தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில்
புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதற்கு முன்னதாக ஒன்றிய குழு தலைவர் எம் திவ்யா மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தும் புதுமண தம்பதிகளுக்கிடையே கலந்துரை யாடியனார் நிகழ்வில் வட்டார மேற்பார்வை யாளர்கள்
சரஸ்வதி, ஆனந்த லெட்சுமி, பழனியம்மாள், செல்வி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,சந்திர மோகன்,வட்டார ஒருங்கிணை ப்பாளர் வனஜா, கண்காணிப்பாளர் ஜெகதீசன், மற்றும்
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஆலங்குளம் வட்டாரத்தை சார்ந்த புதுமண தம்பதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *