வலங்கைமானில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 16-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில மைய முடிவின் படி தமிழக அரசு16-அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி
வருகின்ற 13-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில்செல்ல உள்ளார்கள்.

அதுகுறித்து பிரச்சார இயக்கம் வலங்கைமான்
ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்றது. வட்டத் தலைவர் எஸ். பிரபு தலைமை ஏற்று நடத்தினார், மாநில செயற்குழு உறுப்பினர்டி. ராஜசேகரன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர்என். வசந்தன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநிலத் தலைவர் மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். ரமேஷ்கோரிக்கை விளக்கசிறப்புரையாற்றினார்.

ஆணையர் என். ஜி. கமலராஜன், முன்னாள் மாநில துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைஅனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநிலத் தணிக்கையாளர் எஸ்.புஷ்பநாதன் ஆகியோர்வாழ்த்தி பேசினார்கள்.

காலியிடங்களை நிரப்புதல், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வுநிலை சிறப்புநிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்துஉரிமைகளையும் வழங்குதல், தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணிநிரந்தரப் படுத்துதல், முழு சுகாதாரத் திட்டஒருங்கிணைப்பாளர் களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், வளர்ச்சித் திட்ட பணிகளை விரைந்து முடித்திட மக்கள் தொகை
அடிப்படையில் ஊராட்சிமற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்தல், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள்,உதவி செயற் பொறியாளர்கள் ஆகியநிலையில் உள்ள காலியிடங்களை நிரப்புதல்,தமிழக முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை
நிறைவேற்றுதல், அரசாணை 572-ன்படிகடந்த காலங்களில் வேலை நிறுத்த காலங்களை வரன்முறைபடுத்துதல், அரசாணை54-இல் திருத்தம் செய்தல் உள்ளிட்ட 16- அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி வருகின்ற19-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் செல்ல பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இறுதியில் வட்ட பொருளாளர் வி. நடராஜன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *