ஜே சிவக்குமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்ப உல் உலா மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்,பள்ளிமாணவ,மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பள்ளி கல்வித்துறையின் சார்பில்,பள்ளிமாணவ,மாணவியர்களுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்டஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்கள் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் உடனிருந்தார்.
பின்னர், இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். அந்தவகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் ஊரக பகுதிகளில் விரிவுப்படுத்தப் பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா சீருடை, விலையில்லா பாடபுத்தகங்கள், விலையில்லா மிதிவண்டிகள் என பல திட்டங்கள். இந்த திட்டங்கள் அனைத்தும் கிராமப்புற பகுதியிலுள்ள மாணவ, மாணவியர்கள் கல்வி கற்க வேண்டுமென என்ற நோக்கத்தினை அடிப்படையாக கொண்டது.
மேலும், மாணவ, மாணவியர்கள் எந்தவித காரணமும் கூறாமல் பள்ளிக்கு சரியான நேரத்தில் வருகைபுரிதல் வேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட இலவச விலையில்லா மிதிவண்டியானது உங்களுடைய கல்வி பயணம், வாழ்க்கை பயணம் மேன்மேலும் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் வழங்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவியர்களுக்கும் புதுமைபெண் திட்டத்தின் கீழ் கல்லூரி படிப்பு பயின்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களுடைய முன்னேற்றம் அடுத்த தலைமுறையினருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமையவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 203 மாணவியர்களுக்கும், மன்ப உல் உலா மேல்நிலைப்பள்ளியில் 187 மாணவர்களுக்கும்; விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ மற்றும் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் வழங்கினார்கள்
நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் கூத்தாநல்லூர் நகர்மன்ற தலைவர் பார்திமா பஷிரா, வட்டாட்சியர் குருமூர்த்தி தலைமையாசிரியர் .ரேவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்