கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் குடிநீர் வேண்டி காலி குடங்களுடன் கிராம மக்கள் போராட்டம்
குடிநீரில் அலட்சியம் காட்டும் திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்அருகே திருவலஞ்சுழி ஊராட்சிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் காலணி கிராமத்தில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் இன்றி கிராம மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள்..
கிராம மக்கள் அன்றாட தேவைக்கு கூட நெடுந்தூரம் சென்று குடிநீருக்கு சென்று வர வேண்டியுள்ளது.
மேலும் காலை வேலையில் சரியாக குடிநீரை ஊராட்சி நிர்வாகம் வழங்குவது இல்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.
பள்ளி , கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், அன்றாட வேலைக்கு செல்வோர்களும் குடிநீர் இல்லாமலும் , அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் பரிதவிக்கின்றனர்.
எனவே திருவலஞ்சுழி ஊராட்சி நிர்வாகம் குடிநீர் இல்லாமல் தவிக்கும் மக்களை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் குடிநீர் இல்லாமல் பரிதவிக்கும் கிராம மக்களின் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.