வலங்கைமானில் தொடக்கப் பள்ளிகளில் பி.எட் முயற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படுவதை கண்டித்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் எண்னும்
எழுத்தும் திட்டத்தில் மாணவர்கள் கற்றல் திறனை ஆய்வு செய்ய தமிழ்நாடு கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் வழக்கு நிறுவனம் ஒரு முதுகலை ஆசிரியரை உள்ளடக்கிய மூணு நபர் மதிப்பீட்டுக் குழுவினை பள்ளிகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு வருகிறது.
இதில் மாவட்ட அளவில் அரசு. அரசு உதவி பெறும் மற்றும் தனியா பி எட் கல்லூரி மாணவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கற்றல் திறன் மதிப்பீட்டின் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பி.எட் ஆசிரியர் முயற்சி மாணவர்களை கொண்டு பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்வது ஆசிரியர்களை அவமதிக்கும் செயல் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறனர்.
தலைமை ஆசிரியர்களை விட உயர்நிலை உறுப்புகளை கொண்ட அலுவலர்களைக் கொண்டு மட்டுமே பள்ளிகளில் ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வலங்கைமான் வட்டாரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் கோ. பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மா .புனித குமாரி முன்னிலையில் வைத்தார்.
வட்டார செயலாளர் மு சரவணா குமார் வரவேற்புரை மாற்றினார். இந்த போராட்டத்தில் அரசு பி.எட் ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் கற்றல் மதிப்பீடுகளை உடனே நிறுத்த வேண்டும். இதற்கான உத்தரவுகளை திரும்ப பெற வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர் .
இறுதியில் வட்டார பொருளாளர் எம் ராஜா ராமன்நன்றியுரை கூறினார் .இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.