முடுவார்பட்டி ஊராட்சியில் இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழா
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி ஊராட்சியில் இமானுவேல் சேகரன் குருபூஜை விழா நடைபெற்றது

முன்னதாக வானவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க பெண்கள் பால் குடம் எடுத்து வந்தனர் பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரனின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்தனர்.
தொடர்ந்து கொடியேற்றி இனிப்புகளும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆண்களும் பெண்களும் நடனம் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. விழா ஏற்பாடுகளை தேவேந்திரகுல சங்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை பாலமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரஸ்வதி தலைமையிலான போலீசார் செய்திருந்தார்..