கண்ணுடையாள்புரத்தில் இமானுவேல் சேகரன். நினைவு தினத்தை முன்னிட்டு நலதிட்ட உதவி வழங்கல்
சோழவந்தான்
சோழவந்தான்அருகே கண்ணுடையாள்புரத்தில் இமானுவேல் சேகரனின் 66.வது குருபூஜை விழா முன்னிட்டு மதுரை மேற்கு மாவட்ட தமிழர் தேசியக் கழகம் சார்பில் பொதுக்களுக்கு நலதிwட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு தமிழர் தேசியக் கழக தலைவர் வழக்கறிஞர். வையகம்.தலைமை தாங்கி இமானுவேல் சேகரன் உருவுபடத்திற்கு மாலையணிவித்து மரியாதை செய்து பின்னர் மாணவ மாணவிகளுக்கு நோட் புக் வழங்கி அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட. தலைவர் குமார் மாவட்ட செயலாளர் முத்துபாண்டி. மற்றும்! மாவட்ட நிர்வாகிகள் சரவணன் மணிகண்டன். ஒன்றிய நிர்வாகிகள் கார்த்திக்.பாலமுருகன். அஜீத்.என பலர் கலந்து கொண்டனர்.