வாடிப்பட்டியில் மகாகவி பாரதியார் நினைவு தினம்.!! மாணவர்களுக்கு பேனா. புத்தகம். வழங்கல்
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சி 18.வது வார்டு மேட்டு நீரேத்தானில் செயல்பட்டு வரும் அரசு துவக்கப்பள்ளியில் மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் 102 வது நினைவு தினத்தை முன்னிட்டு 4.மற்றும் 5.ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பேரூர் அதிமுக சார்பில் நலதிட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அதிமுக செயலாளர் முனைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார் பேரூர் கவுன்சிலர் சூரியா அசோக்குமார் மாணவர்களுக்கு பேனா திருகுறள் மற்றும். தமிழ் அகராதி புத்தகங்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் அகிலத்து இளவரசி .தலைமையாசிரியை மகேஸ்வரி. உதவியாசிரியை உலகமாதா.என பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு வாடிப்பட்டியில் உள்ள போடிநாயக்கன்பட்டி பொட்லுப்பட்டியில் உ ள்ள காந்திஜி ஆரம்பப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தயிழ்மாநில காங்கிரஸ் வட்டார தலைவர் தலைமையில் பேரூர் கவுன்சிலர் கீதா சரவணன். நோட் மற்றும் திருக்குறள் தமிழ் அகராதி புத்தகங்களை வழங்கினார்
இந்நிகழ்வில். .தலைமையாசிரியை வெங்கிடலெட்சுமி.பள்ளி குழ தலைவர் தனபால் செயலர் நாகேஷ்வரன்.ஆசிரியர்கள் ஆசிர்வாதம்பீட்டர் எஸ்தர் டார்த்தி சுதா. உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.